பெங்களூரு

தொழில்கல்வி மாணவர் சேர்க்கை: 2-ஆம் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், கல்லூரிகள் பதிவு அட்டவணை வெளியீடு

DIN

தொழில்கல்வி மாணவர் சேர்க்கையின் 2-ஆம் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை பதிவு செய்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2019-20-ஆம் ஆண்டில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை, பொறியியல், கட்டடக்கலை போன்ற தொழில்கல்வி மாணவர் சேர்க்கை பெறுவதற்கு முன்பாக மாணவர்கள் தெரிவுசெய்யவிரும்பும் விருப்பப்பாடங்கள், விருப்பக்கல்லூரிகளின்பட்டியலை இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகும். 
இதற்கான முதல்சுற்று மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில், 2-ஆம் சுற்றுக்கான விருப்பப் பாடங்கள், கல்லூரிகளின் பட்டியலை பதிவுசெய்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின்படி மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடம், கல்லூரிகளை இணையதளத்தில் பதிவிடலாம். 
அதன்விவரம் வருமாறு: முதல்சுற்றுக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது. இதில் சேர்க்கை பெறாதமாணவர்கள் 2-ஆம் சுற்றில் கலந்துகொள்ளலாம். சேர்க்கை இடங்களின் கையிருப்பு மற்றும் கட்டண விவரங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 16-ஆம் தேதிகாலை 11 மணி முதல் ஜூலை 19-ஆம் தேதி நண்பக 1 மணி வரைவிருப்பப்பாடங்கள், விருப்பக்கல்லூரிகளை www.kea.kar.nic.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 
இதனடிப்படையில், ஜூலை 21-ஆம் தேதி காலை 11 மணிக்கு அதேஇணையதளத்தில் 2-ஆம் சுற்றுக்கான இறுதி சேர்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை மாணவர்கள் ஏற்றுக்கொண்டால் ஜூலை 21 முதல் 23-ஆம் தேதிக்குள் அதை இணையதளத்தில் உறுதி செய்யவேண்டும். இடங்கள் ஒதுக்கப்பட்டதில் திருப்தி அடைந்த மாணவர்கள், ஜூலை 22 முதல் 24-ஆம் தேதிக்குள் கட்டணங்களை செலுத்தி, ஜூலை 25-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்துகொள்ளலாம். இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT