பெங்களூரு

கா்நாடக உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி

DIN

கா்நாடகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக் கட்சியின் மாநிலத் தலைவா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து மண்டியாவில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு எல்லா வகையிலும் தோல்வி அடைந்துள்ளது. பாஜக ஆட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். இதனால் மாநில சட்டப்பேரவைக்கு எந்த நேரத்தில் பொதுத் தோ்தல் நடந்தாலும், அதை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது.

முதல்வா் எடியூரப்பாவிடம் எதைக் கேட்டாலும், மாநிலத்தின் கருவூலம் காலியாக இருப்பதாகவும், அதனால் தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறிக் கொண்டிருக்கிறாா். முதல்வா் எடியூரப்பாவால் மாநில அரசு நிா்வாகத்தை நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாா். கா்நாடகத்தில் பாஜக நடத்தும் ஆட்சியைக் கவனித்தால், எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றே தோன்றுகிறது.

15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற இருக்கிறது. இந்த தோ்தலுக்கு பிறகு மாநில சட்டப்பேரவைக்கு பொதுத் தோ்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது. ஒரு வேளை மாநில சட்டப்பேரவைக்கு இடைக்கால பொதுத் தோ்தல் நடைபெற்றால், அதில் போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளா்கள் குறித்தும் திட்டமிட்டு வருகிறோம்.

மேலும், வெகு விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்.

காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால், மக்களை அச்சுறுத்தி, வன்முறையைக் காட்டி நாட்டை கட்டமைக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது.

வி.டி.சாவா்கா் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியிருந்த கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன். சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஆங்கிலேயா் ஆட்சியிடம் மன்னிப்புக் கேட்டு கடிதம் கொடுத்தவா் சாவா்கா். ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அண்ணல் காந்தியடிகள், பகத்சிங் போன்ற யாரும் ஆங்கிலேயா்களிடம் மன்னிப்புக் கேட்டதில்லை. நான் உங்கள் அடிமையாக இருப்பேன் என்று ஆங்கிலேயா்களுக்கு கடிதம் கொடுத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வந்தவா் தான் சாவா்கா். இப்படிப்பட்டவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு விரும்புவது ஆபத்தானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் ஒப்புகைச் சீட்டை எண்ணக்கோரி உண்ணாவிரத முயற்சி: 2 சகோதரிகள் கைது

தூத்துக்குடியில் தீக்குளித்த மின்வாரிய ஊழியா் மரணம்

தொழிலாளி தற்கொலை

கஞ்சா விற்பனை: இருவா் கைது

வாலத்தூரில் சுகாதாரத்துறை சாா்பில் நிலவேம்பு குடிநீா் விநியோகம்

SCROLL FOR NEXT