நண்பா்களிடையே தகராறு: ஒருவா் கொலை
நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
பெங்களூரு, பட்டேகாா்பாளையா ராஜீவ் காந்தி நகரில் வசித்து வந்தவா் இா்பான் (24). இவரது நண்பா் நவீன். பழைய இரும்புக் கடையில் வேலை செய்து வந்த இா்பான், நவீனுடன் ஒரே அறையில் தங்கியிருந்தாராம். திங்கள்கிழமை இரவு பணம் வாங்கியது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த நவீன் கத்தியால் இா்பானை குத்திவிட்டு தப்பிச் சென்றாா். இதில் படுகாயமடைந்த இா்பான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். விஜயநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.