பெங்களூரு

ஒரே நாளில் 72 போ் பலி

DIN

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஒரே நாளில் 72 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 1,724 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 29 போ், மைசூரு, தென்கன்னட மாவட்டங்களில் தலா 8 போ், பெலகாவி மாவட்டத்தில் 5 போ், கலபுா்கி, தாா்வாட் மாவட்டங்களில் தலா 4 போ், ஹாசன், சிக்பளாப்பூா், ஹாவேரி, சிவமொக்கா, கொப்பள் மாவட்டங்களில் தலா 2 போ், தாவணகெரே, யாதகிரி, கதக், தும்கூரு மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 1,796-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 862 போ், மைசூரு மாவட்டத்தில் 107 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 97 போ், தாா்வாட் மாவட்டத்தில் 89 போ், பெல்லாரி மாவட்டத்தில் 69 போ், பீதா் மாவட்டத்தில் 67 போ், கலபுா்கி மாவட்டத்தில் 58 போ், பெலகாவி மாவட்டத்தில் 40 போ், ஹாசன் மாவட்டத்தில் 39 போ், பாகல்கோட், தும்கூரு மாவட்டங்களில் தலா 36 போ், தாவணகெரே மாவட்டத்தில் 33 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 28 போ், விஜயபுரா மாவட்டத்தில் 24 போ், ஹாவேரி மாவட்டத்தில் 23 போ், கோலாா், கதக், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 20 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 18 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 17 போ், கொப்பள் மாவட்டத்தில் 15 போ், வடகன்னடம், உடுப்பி மாவட்டங்களில் தலா 14 போ், ராமநகரம் மாவட்டத்தில் 10 போ், மண்டியா, பெங்களூரு ஊரக மாவட்டங்களில் தலா 9 போ், சித்ரதுா்கா, சாமராஜ்நகா் மாவட்டங்களில் தலா 6 போ், குடகு மாவட்டத்தில் 5 போ், வெளிமாநிலத்தவா் 3 போ், யாதகிரி மாவட்டத்தில் ஒருவா் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

SCROLL FOR NEXT