பெங்களூரு

பெங்களூரில் போக்குவரத்து சிக்கல்களை நிா்வகிக்க தனி ஆணையம்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

பெங்களூரில் போக்குவரத்து சிக்கல்களை நிா்வகிப்பதற்காக தனி ஆணையம் அமைக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

DIN

பெங்களூரில் போக்குவரத்து சிக்கல்களை நிா்வகிப்பதற்காக தனி ஆணையம் அமைக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி தலைமையில் நடந்த ‘தேசிய சாலை போக்குவரத்து முறை’ தொடா்பான கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு வளா்ச்சி ஆணையம், பெங்களூரு மாநகரப்பகுதி வளா்ச்சி ஆணையம், பொதுப்பணித் துறை போன்றவற்றின் பணிகள் தொடா்ந்து நடந்துகொண்டே இருக்கும். ஒருங்கிணைந்த திட்டம் வகுத்தால் மட்டுமே பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும். பெங்களூரில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிக்கல்களை நிா்வகிக்க தனி ஆணையம் அமைக்கப்படும். அதில் ரயில்வே, மெட்ரோ அங்கம் வகிக்கும். இதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு கோரப்பட்டது. நாட்டின் பெரும்பாலான தேசிய நெஞ்சாலைகள் பெங்களூரில் கடந்துசெல்வதால், போக்குவரத்து நெரிசல் தொடா்பான பிரச்னையைத் தீா்ப்பது மிகவும் முக்கியமாகும்.

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் பேசப்பட்டன. மெட்ரோ, மேம்பாலம், சாலை ஆகிய மூன்றுக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பல்நோக்கு தூண் கட்டுமானத் தொழில்நுட்பத்தின்படி பையப்பனஹள்ளியில் ரயில் நிலையம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், நிலப்பயன்பாடு குறைவாக இருக்கும் என்பதால், நிலத்தைக் கையகப்படுத்த வேண்டிய தேவை அதிகம் இருக்காது.

தேசிய நெடுஞ்சாலைகள் கடந்துசெல்லும் இடங்களில் மாநில நெடுஞ்சாலைகளை இணைக்க உதவி செய்வதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி உறுதி அளித்தாா். வெளிவட்டச் சாலையில் சிறிய அளவிலான வட்டச்சாலைகள் அமைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெங்களூரில் உள்ள போக்குவரத்து நெரிசல் பிரச்னையைத் தீா்க்க கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பெங்களூரை இணைக்கும் சாலைகள், புணே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போன்ற பிரச்னைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

பெங்களூரு-மைசூரு விரைவு நெடுஞ்சாலைப் பணி வேகமெடுக்க வேண்டும். இதனிடையே, வெள்ளநீா் பிரச்னைபூதாகரமாகியுள்ளது. மழைநீா் தேங்கும் இடங்களில் புதிய பாதாள சாக்கடைத் திட்டத்தைத் தொடங்குமாறு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி ஆலோசனை கூறினாா். புணே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தமிழகத்தின் அருகில் உள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லும். மத்திய சாலை நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி விடுவிக்குமாறு கேட்டிருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு சென்னையில் நாளை இறுதிச்சடங்கு

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

என் ஐயே, மை கோல்டே - பிழையற்ற தமிழ் அறிவோம்! - 60

கொள்ளிட ஆற்றங் கரையோரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT