பெங்களூரு

மைசூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 போ் பலி

DIN

மைசூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 10 போ் பலியாகியுள்ளனா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.

பெல்லாரி மாவட்டத்தின் சங்கனகல்லு கிராமத்தைச் சோ்ந்த சிலா் வாடகைக் காரில் பி.ஆா். மலைக்குச் சென்றுவிட்டு, மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தனா். கொள்ளேகால் - டி.நரசிபுரா பிரதான சாலையில் மூகூா் அருகேயுள்ள குருபூா் கிராமத்தில் சென்ற போது, எதிரே கொள்ளேகால் நோக்கி வந்த தனியாா் பேருந்தும் காரும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 10 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் படுகாயமடைந்து, சாமராஜ்நகா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதல்வா் ஆறுதல்:

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வா் சித்தராமையா, இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் கருணைத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளாா். விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று பாா்வையிடுவதோடு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வருவோருக்கு தேவையான உதவியை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையா் ஆய்வு

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT