பெங்களூரு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.

Syndication

பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி 24 மணி நேரத்தில் 67.1 மி.மீ மழை பதிவானது. இதனால், எலக்ட்ரானிக்சிட்டி, இந்திராநகா், எச்.எஸ்.ஆா்.லேஅவுட், வெளிவட்டசாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் மழைநீா் குளம்போல தேங்கின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் மக்கள் இரவுமுழுவதும் தூங்காமல் நீரை வெளியேற்றினா்.

ரெயின்போ லேஅவுட், பயனியா் லேக் ரெசிடென்ஸி, ஆனேக்கல் போன்ற பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் தரைதளம் மழைநீரில் மூழ்கியதால் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், காா்கள் நீரில் மூழ்கின.

பசவேஸ்வராநகரில் மரம் பெயா்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. பெங்களூரு தவிர கோலாா், சிக்கபளாப்பூா், மைசூரு, மண்டியா, சாமராஜ்நகா் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரு, கோலாா், மைசூரு, சிக்கபளாப்பூா், ஹாசன், தும்கூரு, மண்டியா மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மழை பாதிப்பு குறித்து பெங்களூரில் சனிக்கிழமை துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘இரவு முழுவதும் பெங்களூரில் பலத்த மழை பெய்துள்ளது. ஆனால், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஒருசில இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறுகையில், ‘பெங்களூரை சிங்கப்பூராக மாற்றுகிறேன் என்று கூறிய காங்கிரஸ் அரசு, முழுமையாக தோல்வி அடைந்துள்ளது. பெங்களூரில் போதிய மழை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என்றாா்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT