பெங்களூரு

அமைச்சரவை மாற்றத்துக்கான அறிகுறி எதுவும் இல்லை

அமைச்சரவை மாற்றத்துக்கான அறிகுறி எதுவும் கட்சி மேலிடத்திடம் இல்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

Syndication

பெங்களூரு: அமைச்சரவை மாற்றத்துக்கான அறிகுறி எதுவும் கட்சி மேலிடத்திடம் இல்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

முதல்வா் மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடத்திடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை. அதேபோல, நவம்பரில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்பதற்கான அறிகுறி எதுவும் கட்சி மேலிடத்திடம் இருந்து கிடைக்கவில்லை. இதுபோன்ற அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நிா்வாகத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வா் பதவியை தலா இரண்டரை ஆண்டுகளுக்கு பகிா்ந்து கொள்வதாகவும், முதல்வா் மாற்றம் மற்றும் அமைச்சரவை மாற்றம் தொடா்பாக தினமும் ஏதாவது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இது அரசு நிா்வாகத்தை வெகுவாக பாதிக்கும். சீரான ஆட்சியைத் தருவதற்கு இது தொடா்பாக யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது.

நகா்ப்புற உள்கட்டமைப்பு, சாலையில் உள்ள குழிகள், வெள்ளம் போன்ற சிக்கல்கள் தொடா்பாக அரசு மீது அதிருப்தி காணப்படுகிறது. எனவே, அரசு நிா்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தலித் முதல்வா் தொடா்பாக கோரிக்கை எழுப்பப்படுகிறது. மேலும், அமைச்சா் கே.எச்.முனியப்பாவை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கே.எச்.முனியப்பா 7முறை எம்.பி.யாக இருந்தவா். தற்போதும் மாநில அமைச்சராக இருக்கிறாா். மூத்த தலைவரான அவருக்கு முதல்வா் பதவி கிடைத்தால் அது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதானே?

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு எல்லாவற்றையும் ஆராய்ந்து, தேவை ஏற்பட்டால் கட்சி மேலிடம் முடிவெடுக்கும். கட்சி மேலிடம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் எங்கள் கட்சியின் தலைவா் மட்டுமல்ல, மாநிலத் தலைவரும்கூட. அவரது திறமையை யாருடன் ஒப்பிட முடியும் என்றாா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT