முகப்பு
சென்னை

ஆட்டோ ஓட்டுநர்கள் ஊர்வலம்

கடலூர், ஜன. 8: சாலைப் பாதுகாப்பு வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஊர்வலம் (படம்) நடத்தினர்.  கடலூர் நகர ஆட்டோ ஓட்டு

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

கடலூர், ஜன. 8: சாலைப் பாதுகாப்பு வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஊர்வலம் (படம்) நடத்தினர்.

 கடலூர் நகர ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் இந்த ஊர்வலம் நடந்தது. சுப்புராயலு பூங்கா அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை வரை சென்று திரும்பியது.

சாலை பாதுகாப்பை எடுத்துக் கூறும் வகையில் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

 ஊர்வலத்துக்கு சங்கத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

கெüரவத் தலைவர் எல்.நாகேஷ், செயலாளர் சி.எஸ்.பி. சண்முகம், பொருளாளர் ஜெயக்குமார், துணைத் தலைவர் அமானுல்லா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.   

 ஊர்வலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் ஊழியர்களும், போக்குவரத்துக் காவலர்களும் கலந்து கொண்டனர்.

 கல்வித்துறை சார்பில்

 கடலூர் மாவட்டக்   கல்வித் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு வார நிறைவு விழா, கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகே வெள்ளிக்கிழமை நடந்தது.

 திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, அந்த வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் முகப்பு விளக்குகளில் கருப்பு வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டினர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன் முன்னிலை  வகித்தார்.  

 ஸ்டிக்கர் ஒட்டும் பணியை, கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

சாலை பாதுகாப்புப் படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எஸ்.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →