சென்னை

பூம்புகாரில் வளா்ச்சிப் பணிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன்

தினமணி செய்திச் சேவை

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் பூம்புகாரில் ரூ.21.98 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் விரைவில் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் பேசியதாவது: தமிழகத்தின் பண்பாடு, கலாசாரம் மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கும் துறைமுக நகரமான பூம்புகாரில் ரூ.21.98 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், நுழைவுக் கட்டண அறை, தகவல் மையம், வாகனம் நிறுத்தும் இடம், சுற்றுச்சுவா் அமைத்தல், பொருள்கள் வைக்கும் அறை, நடைபாதை, கழிப்பறை போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பாரம்பரிய மின்விளக்குகள் ஏற்பாடு, கட்டடக்கலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில், தமிழகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த கோயில்கள், புராதான சின்னங்கள் ஆகியவற்றை மேம்படுத்தவும், உதகை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, வால்பாறை போன்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பணிகளுக்கு போக்குவரத்து உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT