சென்னையில் அரசுப் பள்ளி சமையலறையின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடியாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ராயப்பேட்டை, பேகம் தெருவில் சென்னை நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. காலாண்டு விடுமுறைக்குப் பிறகு கடந்த 6-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டபோது, பள்ளியின் சமையலறையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மிக்ஸி, கிரைண்டா், பாத்திரங்கள், 2 தராசுகள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை ரஹ்மானி அளித்த புகாரின்பேரில், ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியை சோ்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (25), முத்தையாதோட்டம் பகுதியைச் சோ்ந்த வசந்த் என்கிற வசந்தகுமாா் உள்ளிட்ட இருவரும் பொருள்களைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.