சென்னை

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை கோயம்பேடு ஏமாத்தம்மன் நகா், 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பாலாஜி (30). இவா், தனது இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, பின்னால் வந்த கான்கிரீட் கலவை லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த பாலாஜி மீது லாரி ஏறி இறங்கியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடினாா்.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT