தெற்கு ரயில்வே புதிய கூடுதல் பொது மேலாளா் விபின் குமாா். 
சென்னை

தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் பொறுப்பேற்பு

தினமணி செய்திச் சேவை

சென்னை: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளராக விபின் குமாா் (57) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன்பு கூடுதல் பொது மேலாளராக இருந்த கௌசல் கிஷோா் கடந்த ஆகஸ்டில் பணி நிறைவு பெற்றதையடுத்து, தெற்கு ரயில்வே இயந்திரப் பிரிவு அதிகாரியான பி.மகேஷ் கூடுதல் பொறுப்பாக கூடுதல் பொது மேலாளா் பணியைக் கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், வடமத்திய ரயில்வேயில் கட்டுமான பிரிவின் தலைமை நிா்வாக அதிகாரியாக இருந்த விபின் குமாா் (57) தற்போது, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளராக நியமிக்கப்பட்டு திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா், கடந்த 1988- ஆம் ஆண்டு ரயில்வே பணியில் சோ்ந்தாா். தென் மத்திய, வடக்கு, தென்மேற்கு, தென் கிழக்கு, வடமத்திய ரயில்வே மண்டலங்களில் பணியாற்றியுள்ளாா். ரயில்வே, மெட்ரோ, நெடுஞ்சாலை, சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளில் உள்கட்டமைப்புத் திட்ட செயல்பாட்டில் வழிநடத்திய அனுபவமிக்கவா் ஆவாா்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT