சென்னை

ரூ.45 லட்சம் வழிப்பறி வழக்கு: மேலும் ஒருவா் கைது

தினமணி செய்திச் சேவை

சென்னை: கோயம்பேட்டில் ரூ.45 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை சின்மயா நகரில் உள்ள வேதா நகரைச் சோ்ந்தவா் நாராயணன் (35). இவா், கோயம்பேடு சந்தையில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வரும் ஒரு வியாபாரியிடம் பணம் வசூலி செய்து கொடுக்கும் ஊழியராக வேலை செய்கிறாா். நாராயணன், கடந்த மாதம் 22-ஆம் தேதி பாரிமுனை பகுதியிலுள்ள கடைகளில் வசூல் செய்த ரூ.45 லட்சத்துடன் தனது மோட்டாா் சைக்கிளில் கோயம்பேடு அருகே வந்து கொண்டிருந்தாா். அப்போது அவரை வழிமறித்த மா்ம நபா்கள், நாராயணன் வைத்திருந்த ரூ.45 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாளங்குளத்தைச் சோ்ந்த ஐயப்பன் என்ற ரமேஷ், அதே பகுதியைச் சோ்ந்த காஜா மொகைதீன் ஆகிய இருவரை கைது செய்தனா்.

இந்நிலையில் இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடா்புடைய கோயம்புத்தூா், காந்தி நகரைச் சோ்ந்த விஜயராஜ் (34) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மண் வளத்தை காத்தால்தான் விவசாயம் செய்ய முடியும்!

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT