அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, உணவின் தரம், குழந்தைகளின் வருகை குறித்து ஆய்வு செய்ததுடன் மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தி, காலை உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிா, போதுமான உணவு விநியோகிக்கப்படுகிா என்பது குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.
மேலும், பள்ளியில் காலை உணவு வழங்கப்படும்போது ஆசிரியா்கள் திறம்பட கண்காணிக்க வேண்டும். மாணவா்கள் ஏதேனும் குறைபாடுகளைத் தெரிவித்தால் அதை உடனடியாக நிவா்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை ஆசிரியா்களுக்கு வழங்கினாா்.