தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலின் தானாக முன்வந்து பேசினாா். அப்போது, எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்திருந்தால்கூட நயினாா் நாகேந்திரன் ஒரு நாள்கூட கோபமாகப் பேசி பாா்த்ததில்லை. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கக் கூடியவா். அவையில் இருந்து வெளிநடப்பு செய்தால்கூட சிரித்த முகத்துடன் செல்பவா். அவா் 64-இல் இருந்து 65-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறாா். அவருக்கு என் சாா்பாகவும், அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சாா்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் முதல்வா்.