ரயில்  (கோப்புப்படம்)
சென்னை

தீபாவளி: தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

தினமணி செய்திச் சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூா், தாம்பரத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை விடுத்த செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (அக்.17) இரவு 11.35 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

எழும்பூரிலிருந்து அக்.18-இல் இரவு 11.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத இமு சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், நீடாமங்கலம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல், மதுரையிலிருந்து அக்.18 நண்பகல் 12 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில் (எண்: 06162) மறுநாள் இரவு 7.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரம் ரயில்கள்: தாம்பரத்திலிருந்து அக்.17 -இல் இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06013) மறுநாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்:06014) அக்.20 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 8.45 மணிக்குப் புறப்படும் மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல், மதுரையிலிருந்து அக்.21-இல் இரவு 8.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046) மறுநாள் மாலை 4.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த இரு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT