வெடி விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் படம் - யூடியூப்
சென்னை

ஆவடி அருகே நாட்டு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த விவகாரம்: மேலும் இருவர் கைது!

பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் இருவர் கைது!

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னை, ஆவடி அருகே நாட்டு வெடி தயார் செய்து விற்பனை செய்யும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக். 19) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் இன்று(அக். 20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டாபிராமில் உள்ள ஒரு வீட்டில் தீபாவளியையொட்டி நாட்டு வெடிகளைத் தயார் செய்து விற்பனை செய்துவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக். 19) மாலை நாட்டு வெடி வெடித்து ஏற்பட்ட விபத்தில் தீப்பற்றி வீடு முழுமையாகச் சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆணையர் சங்கர், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். மேலும், இச்சம்பவம் குறித்து பட்டாபிராம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் கோயில் திருவிழா, துக்க நிகழ்வுகளுக்கு நாட்டுப் பட்டாசுகளை வியாபாரம் செய்யும் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கோவிந்தராஜ், அவரிடம் பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்யும் தாமோதிரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக என்று காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Two more arrested in Pattabhiram bomb blast that killed 4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT