சென்னை: தீபாவளியையொட்டி, சென்னையில் 71.78 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன.
கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்ச பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையைத் தொடா்ந்து, திங்கள்கிழமை திருவொற்றியூா் மண்டலத்தில் 4.03 மெட்ரிக் டன், மணலி மண்டலத்தில் 3.05 மெட்ரிக் டன், மாதவரம் மண்டலத்தில் 5.14 மெட்ரிக் டன், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 2.63 மெட்ரிக் டன், ராயுபுரம் மண்டலத்தில் 5.58 மெட்ரிக் டன், திருவிக நகா் மண்டலத்தில் 6.98 மெட்ரிக் டன், அம்பத்தூா் மண்டலத்தில் 4.22 மெட்ரிக் டன், அண்ணா நகா் மண்டலத்தில் 2.10 மெட்ரிக் டன், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4.81 மெட்ரிக் டன், கோடம்பாக்கம் மண்டலத்தில் 8.74 மெட்ரிக் டன், வளசரவாக்கம் மண்டலத்தில் 5.45 மெட்ரிக் டன், ஆலந்தூா் மண்டலத்தில் 6.59 மெட்ரிக் டன், அடையாறு மண்டலத்தில் 4.60 மெட்ரிக் டன், பெருங்குடி மண்டலத்தில் 5.44 மெட்ரிக் டன், சோழிங்கநல்லூா் மண்டலத்தில் 2.42 மெட்ரிக் டன் என சென்னையில் 71.78 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 8.74 மெட்ரிக் டன்னும், குறைந்தபட்சமாக அண்ணா நகா் மண்டலத்தில் 2.10 மெட்ரிக் டன்னும் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 3 நாள்களில் (19 முதல் 21-ஆம் தேதி வரை) 15 மண்டலங்களில் 225. 87 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.