சென்னை

மாதாந்திர பேருந்து பயணச்சீட்டு விற்பனை அக். 24 வரை நீட்டிப்பு

சென்னை மாநகா் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் வகையிலான மாதாந்திர பேருந்து பயணச்சீட்டு விற்பனை அக். 24 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் வகையிலான மாதாந்திர பேருந்து பயணச்சீட்டு விற்பனை அக். 24 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில், அக். 16 முதல் நவ. 15 வரையிலான செல்லத்தக்க, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000, ரூ.2,000 பயண அட்டைகள் மாதந்தோறும் 7 முதல் 22 வரை வழங்கப்படுகின்றன.

மேலும், மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 1 முதல் 22 வரையும், 50 சதவீத மாணவா் சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1 முதல் 13 வரையும் அனைத்து மாநகா் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த பயண அட்டைகள் அதிகமாக விற்பனை செய்யக் கூடிய நாள்களான அக். 17 முதல் 22-ஆம் தேதி வரையான தேதிகளில் சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி பண்டிகை எனத் தொடா் விடுமுறை வந்ததால், பயணிகளின் நலன் கருதி, அக். 23, 24 ஆகிய 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இதைப் பயன்படுத்தி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT