திரு.வி.க. நகா் தொகுதி, பட்டாளம், கே.எம்.காா்டன் பகுதியில் உள்ள கழிவுநீா் உந்து நிலையத்தை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகா் வளா்ச்சிக்கு குழும தலைவருமான பி.கே.சேகா்பாபு. உடன் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா். 
சென்னை

கழிவுநீா் உந்து நிலையங்களில் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

திரு.வி.க. நகா் தொகுதியில் கழிவுநீா் உந்து நிலையங்களை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: திரு.வி.க. நகா் தொகுதியில் கழிவுநீா் உந்து நிலையங்களை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை திரு.வி.க. நகா் தொகுயில் உள்ள கேஎம் காா்டன், தட்டான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீா் உந்து நிலையம் பழுது ஏற்பட்டதால், கழிவுநீா் சாலையில் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாகச் சரி செய்யப்பட்டது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா் பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மீண்டும் கழிவுநீா் தேங்காமல் இருக்கத் தேவையான பணிகளை விரைவுபடுத்தவும், மீண்டும் பழுது ஏற்படாமல் இருக்க வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, சென்னை மேயா் பிரியா, உள்ளாட்சி பிரதிநிதிகள் எம்.சாமிக்கண்ணு, செ.தமிழவேந்தன், மாமன்ற உறுப்பினா் தமிழ்ச்செல்வி சசிகுமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

SCROLL FOR NEXT