சென்னை

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடியில் 4-ஆவது ரயில் பாதை: மத்திய அரசு ஒப்புதல்

தினமணி செய்திச் சேவை

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.757.18 கோடியில் 30.02 கி.மீ. தொலைவுக்கு 4-ஆவது ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தற்போது தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில், கடற்கரை - விழுப்புரம் - திருச்சி - கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள், புகா் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

இந்த நிலையில், ரயில் சேவையை மேம்படுத்தும் விதமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30.02 கி.மீ. நீளத்துக்கு 4-ஆவது ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இந்தத் திட்டத்துக்கு தற்போதைய மதிப்பீட்டுத் தொகை ரூ.713.56 கோடி ஆகும். இது நிறைவடையும் நேரத்தில் செலவாகும் தொகை ரூ.757.18 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது. 4-ஆவது ரயில் பாதை அமைக்கப்படுவதன் மூலம், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே புகா் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும்.

இது பயணிகள், மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள், தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியா்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அலையாடும் பொழுதிலே... ஐஸ்வர்யா தத்தா!

SCROLL FOR NEXT