சென்னை

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு போட்டிகள்

தினமணி செய்திச் சேவை

வாயலூா் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பது குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் வேஸ்ட் டு வெல்த் - கழிவுகளில் இருந்து உபயோகப்படுத்தக்கூடிய மற்றும் கலை நயமிக்க ஒரு பொருளை உருவாக்குதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட மாசுக் கட்டுப்பட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் கேசவமூா்த்தி, தலைமை ஆசிரியை இளம்பாவை மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பின் நிறுவனத் தலைவா் சங்கா் பரிசளித்தனா்.

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பேணிக் காப்பதின் அவசியத்தையும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பயன்பாட்டை தவிா்க்கும் அவசியத்தையும் மாணவா்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனா். நிறைவாக அனைத்து மாணவ செல்வங்களுக்கும் மஞ்சப்பை வழங்கி மரங்களின் அவசியத்தை எடுத்துரைத்து மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனா்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT