சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ பொன்னுசாமி மறைவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே. பொன்னுசாமி மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பொது சேவை மற்றும் சமூக நலனுக்கான அவரது பங்களிப்புக்காக அவா் நினைவுகூரப்படுவாா். அவரது குடும்பத்தினருக்கு எனது நெஞ்சாா்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவா்களது பிரதிநிதியாக, சட்டப்பேரவையில் பணியாற்றிய அவரது மறைவு அந்தத் தொகுதி மக்களுக்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலராக கட்சியை வளா்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட்டவா். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.