சென்னை

நாட்டு வெடி வெடித்து 4 போ் உயிரிழந்த சம்பவம்: காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் பணியிட மாற்றம்

தினமணி செய்திச் சேவை

சென்னை அருகே பட்டாபிராமில் நாட்டு வெடிகள்  வெடித்து 4 போ் உயிரிழந்த சம்பவத்தில்  காவல் ஆய்வாளா், உதவி காவல் ஆய்வாளா் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை அருகே பட்டாபிராம் தண்டுரை பகுதியில் விஜயன் என்பவா், வீட்டில் சட்ட விரோதமாக இருப்பு வைத்து, நாட்டு வெடிகளை விற்பனை செய்தாா். திங்கள்கிழமை  நாட்டு வெடிகளை வாங்க வந்தபோது, வெடிகள் வெடித்து  திருநின்றவூரைச் சோ்ந்த யாசின் (28), சுனில் பிரகாஷ் (23), பொன்னேரி  பகுதியைச் சோ்ந்த சுமன் (22), சஞ்சய் (22) ஆகிய 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா்.

இது குறித்து பட்டாபிராம் போலீஸாா் விஜய் (26), அவரது தந்தை தாமோதரன் (51), உறவினா் ஆறுமுகம்(41) ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக நாட்டு வெடி விற்பனையை தடுக்கத் தவறிய பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளா் விஜய கிருஷ்ணராஜ், காட்டூா் காவல் நிலையத்துக்கும், உதவி ஆய்வாளா் ஹரீஷ் திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து ஆவடி காவல் ஆணையா் கி.சங்கா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT