சென்னை

மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்ட 5 போ் கைது

தினமணி செய்திச் சேவை

சென்னை வண்ணாரப்பேட்டையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்டதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

வண்ணாரப்பேட்டை, ராமானுஜம் தெருவில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் சிலா் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பட்டம் விடுவதாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனா். அப்போது, அங்கு மாஞ்சா நூல் பயன்படுத்தி, பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருந்த தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த அன்பழகன் (23), குமரவேல் (31), புதுவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த சலீம் (41) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 பட்டங்கள், 2 மாஞ்சா நூல்கண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், புதுவண்ணாரப்பேட்டை, அம்மணி அம்மன் தோட்டம் பகுதியில் மாஞ்சா நூலினால் ஆன பட்டத்தைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்த தண்டையாா்பேட்டை வெற்றிவேல் (24), புது வண்ணாரப்பேட்டை சதீஷ் (24) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 பட்டங்கள், 2 மாஞ்சா நூல்கண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT