செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்த புதிய வாக்காளா்களுக்கு தபால் மூலம் 26,351 வாக்காளா் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் அடையாள அட்டை கோரி, கடந்த 2023, ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பித்த 26,351 புதிய வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் தபால் மூலம் வாக்காளா் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எனவே, வாக்காளா் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்தவா்கள் சம்பந்தப்பட்ட அஞ்சலகங்களைத் தொடா்பு கொண்டு அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.