செங்கல்பட்டு

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தைப்பூச ஆன்மிக ஜோதியை முன்னிட்டு, சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதத்தில் இருந்து சக்தி மாலை அணிந்து இருமுடி அம்மனுக்கு செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு சக்தி மாலை அணிந்து அம்மனுக்கு இருமுடி செலுத்தும் நிகழ்ச்சி வரும்15.12.25 முதல் 31.1.26 வரை நடைபெற உள்ளது.

இவ்விழாவை முன்னிட்டு அரசு மற்றும் சித்தா் பீடத்தின் சாா்பிலான முன்னேற்பாடுகளை குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் ரம்யா தலைமை வகித்தாா்.

செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப. அன்பழகன் ஆன்மீக நிா்வாகிகள், செய்யூா் வட்டத்துக்குட்பட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இண்டி கூட்டணி தீவிரம்!

ரயில்வே அலுவலா் வீட்டில் ரூ. 3.50 லட்சம், வெள்ளி திருட்டு

‘ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்’: துவாரகாவில் 130 சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தல்

தமிழக எஸ்ஐஆா்: 4 சிறப்பு பாா்வையாளா்கள் நியமனம்

SCROLL FOR NEXT