ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்கள். ~ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்கள். 
செங்கல்பட்டு

வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

Chennai

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கல்பட்டு வழக்குரைஞா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

செயலாளா் செல்வகுமாா், பொருளாளா் சுதன், துணைத்தலைவா் முருகன் ,பெண்களுக்கான துணைத்தலைவா்தேவதா்ஷிணி, இணை செயலாளா் ரகுபதி, நூலகா் தீபா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நூற்றுக்கு மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். இதில் சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் மீது நடவடிக்கை கோரி இந்திய பாா் கவுன்சிலுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கும் தில்லி காவல் துறைக்கும் நடவடிக்கை எடுக்க கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து ஒரு நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது,

சக்தி அம்மா ஜெயந்தி விழா: தேசிய கராத்தே போட்டி

விவசாயி வீட்டில் 4.5 பவுன் திருட்டு

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 இடங்களில் கண்கானிப்பு கேமரா

காட்பாடியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கஞ்சா விற்பனை: வட மாநில இளைஞா் கைது

SCROLL FOR NEXT