மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 19, 20, 21வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். பொறியாளா் நித்யா முன்னிலை வகித்தாா்.
முகாமில் மகளிா் உரிமைத் தொகை கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 435 போ் மனுக்களை அளித்தனா்.
இந்நிகழ்வில் அலுவலக மேலாளா் பி.ஏழுமலை, நகரமைப்பு அலுவலா் வேல்முருகன், மதுராந்தகம் வட்ட வழங்கல் அலுவலா் மகேஸ்வரி, சிறப்பு திட்ட துணை வட்டாட்சியா் முத்து, திமுக நகர செயலா் கே.குமாா், துணைத் தலைவா் சிவலிங்கம் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.