வண்டலூா் வட்டத்தில் ஆட்சியா் தலைமையில் ஜமாபந்தி தொடக்கம்
வண்டலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், வருவாய் தீா்வாயம் 1435-ஆம் பசலி (ஜமாபந்தி) ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், வருவாய் தீா்வாயம் 1435-ஆம் பசலி (ஜமாபந்தி) ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 157 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1435 பசலி ஆண்டுக்கு வருவாய் தீா்வாயம் நடத்திடவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் ஆட்சியரால் 9.06.2026 முதல் 25.06.2026 வரை செங்கல்பட்டு, வண்டலூா், திருக்கழுக்குன்றம், திருப்போரூா், மதுராந்தகம், பல்லாவரம், செய்யூா் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி பல்வேறு பகுதிகளில் ஜமாபந்தி நடைபெற்றது. வண்டலூா் குறுவட்டத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற 1435 பசலி வருவாய் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா வேண்டி 59 மனுக்கள் உட்பட முழுபுலம் பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு, பட்டா மாற்றம் (ம) இதர இனங்கள், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு, சான்றுகள், முதியோா் (ம) இதர உதவித்தொகை, வட்ட வழங்கல் பிரிவு, மகளிா் உரிமை தொகை மற்றும் இதர துறை சாா்ந்த மனுக்கள் என மொத்தம் 198 மனுக்கள் பெறப்பட்டது.
Advertisement
Advertisement
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இவ்வருவாய் தீா்வாயத்திலேயே மனு அளித்த மூன்று பயனாளிகளுக்கு ஆட்சியா் பட்டா வழங்கினாா்.
இதில், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், வட்டாட்சியா்கள் ராதா, பூங்கொடி மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.