சென்னை

கார் ஏறி தொழிலாளி சாவு

சென்னை ஐ.சி.எப்.பில் கார் பின்னோக்கி வந்தபோது ஏற்பட்ட விபத்தில் சாலையோரம் உறங்கி கொண்டிருந்த தொழிலாளி இறந்தார்.

DIN

சென்னை ஐ.சி.எப்.பில் கார் பின்னோக்கி வந்தபோது ஏற்பட்ட விபத்தில் சாலையோரம் உறங்கி கொண்டிருந்த தொழிலாளி இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஐ.சி.எப். கக்கன்ஜிநகர், நியூ ஆவடி சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (60). கூலித் தொழிலாளியான இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் அருகே சாலையோரம் படுத்து தூங்குவது வழக்கம். புதன்கிழமை இரவும் ரவி அங்கு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென ரவியின் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த ரவி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த காரை ஓட்டிய அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (51) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த திருமண மண்படத்தில் நடைபெற்ற ஒரு வரவேற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்ட ஸ்ரீதரன், அங்கிருந்து காரை எடுத்தபோது, காருக்கு பின்னால் உறங்கி கொண்டிருந்த ரவியை கவனிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸார், அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT