சென்னை

வியாபாரி வீட்டில் தங்கம், வைர நகைகள் திருட்டு

சென்னை பூங்கா நகரில் வசிக்கும் வியாபாரி ஒருவரின் வீட்டில் தங்கம், வைர நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

DIN

சென்னை பூங்கா நகரில் வசிக்கும் வியாபாரி ஒருவரின் வீட்டில் தங்கம், வைர நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்ட்ரல் பூங்கா நகர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தீபக் (30). இவர் அந்தப் பகுதியில் ஸ்டேஷ்னரி கடை வைத்து நடத்தி வருகிறார். இரு வாரங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, தனது சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு குடும்பத்துடன் சென்றார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவருடைய வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப் பார்த்த அண்டை வீட்டினர், தீபக் குடும்பத்தினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸார் விசாரணையில் தீபக் வீட்டு பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைர நகை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

SCROLL FOR NEXT