சென்னை

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: ரயில் மறியலுக்கு முயன்ற சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பத்தூரில் ரயில் மறியல் செய்ய முயன்ற சட்டக்கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

DIN

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பத்தூரில் ரயில் மறியல் செய்ய முயன்ற சட்டக்கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த 5 நாள்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் அம்பத்தூரில் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக போலீஸாருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஏராளமான போலீஸார் அம்பத்தூர் ரயில் நிலையப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், புறநகர் மின்சார ரயிலில் பயணிகள்போல் வந்து இறங்கிய சட்டக்கல்லூரி
மாணவர்கள் 43 பேர் ரயில் மறியலுக்கு முயன்றனர். அங்கிருந்த போலீஸார் அவர்களை, தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 
பின்னர், மாணவர்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT