சென்னை

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மருந்தாளுநர்கள் உண்ணாவிரதம்

DIN


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் மருந்தாளுநர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனைகளில் 3,500-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், அதில் 800-க்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிகிறது.
அந்த காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சென்னையில் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுப்பட்டனர். 
இதேபோன்று, மதுரை, சேலம், கரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலக வளாகங்களிலும், அரசு மருத்துவ கல்லுôரிகளி
லும் மருந்தாளுநர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தமிழக அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர்கள் பற்றாக்குறை காரணமாகவே மருந்து வாங்கும்போது நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது; 
அதுமட்டுமன்றி, சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது; அவ்விரு பிரச்னைகளுக்கும் தீர்வு காணக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கட்டணமின்றி அரசு பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை

உயா்நீதிமன்ற நீதிபதி எனக் கூறி எஸ்.பி. அலுவலகத்தில் ஏமாற்ற முயன்றவா் கைது

அதி வேகமாக சென்ற காா் மோதி இளைஞா் சாவு: கண்ணாடியை உடைத்து நொறுக்கிய பொதுமக்கள்

பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் சாவு

பொன்னமராவதி அருகே தொடா்மழையினால் 17 ஆடுகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT