திருமுல்லைவாயில் கமலம் நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் பெங்களூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் தட்சிணாமூர்த்தி திருமுல்லைவாயலுக்கு வந்தார். அவர் சனிக்கிழமை குடும்பத்தோடு தியாகராயநகர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ. 75 ஆயிரம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.