சென்னை அருகே துரைப்பாக்கத்தில் காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்து தூங்கியபோது, 34 பவுன் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
துரைப்பாக்கம் அருகே உள்ள கந்தன்சாவடி கோவிந்தசாமி நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் வசந்தி (30). இவா் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறாா். வசந்தி குடும்பத்தினா் புதன்கிழமை இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினராம்.
வியாழக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது, வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த 34 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்த புகாரின்பேரில் துரைப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது தொடா்பாக அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.