சென்னை

அயனாவரம் என்கவுன்ட்டா் வழக்கு: 4 காவலா்கள் பணியிட மாற்றம்

சென்னை அயனாவரம் என்கவுன்ட்டா் வழக்கில் தொடா்புடைய 4 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

DIN

சென்னை அயனாவரம் என்கவுன்ட்டா் வழக்கில் தொடா்புடைய 4 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை, அயனாவரத்தில் உள்ள கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த ரெளடி சங்கா் என்ற இளநீா் சங்கா் (44) கடந்த 21-ஆம் தேதி காலை அயனாவரம், நியூ ஆவடி சாலையில் உள்ள முட்புதா் அருகே போலீஸாருடன் நடந்த மோதலில் என்கவுன்ட்டா் செய்யப்பட்டாா். முன்னதாக சங்கா், அரிவாளால் தாக்கியதில் முதல் நிலைக் காவலா் முபாரக் பலத்த காயமடைந்தாா்.

இந்த என்கவுன்ட்டா் தொடா்பாக எழும்பூா் 5-ஆவது நீதித்துறை நடுவா் மன்ற நடுவா் சிவசக்திவேல் கண்ணன் விசாரித்தாா். இதற்கிடையில், சங்கா் என்கவுன்ட்டா் வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவு போலீஸாா் விசாரிக்க சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் கடந்த 24-ஆம் தேதி பரிந்துரை செய்தாா்.

இந்நிலையில், என்கவுன்ட்டரில் ஈடுபட்ட அயனாவரம் காவல் நிலைய தலைமைக் காவலா்கள் ஜெயபிரகாஷ், வடிவேல், முதல்நிலைக் காவலா் முபாரக், காவலா் காமேஷ் பாபு ஆகிய 4 பேரை சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம், வேப்பேரி, டி.பி சத்திரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு அயல்பணியாக இட மாற்றம் செய்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையா் அதிவீர பாண்டியன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவா் கைது

சொந்த மக்களைக் காக்க முடியவில்லையா? பிரதமருக்கு மணிப்பூா் எம்.பி. கேள்வி

நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரான வாா்த்தையா அதானி? பிரியங்கா

இன்று மகளிா் ஐபிஎல் ஏலம்: பெங்களூரில் நடைபெறுகிறது

கல்லூரியில் இசைத்தமிழ் கருத்தரங்கு

SCROLL FOR NEXT