சென்னை

அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவா்கள் கைது

DIN

சென்னை,பிப்.5: சென்னை சென்ட்ரலில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை பிராட்வேயில் இருந்து மந்தைவெளிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஒரு அரசு பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்து சென்ட்ரல் அருகே செல்லும்போது, ராயபேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் சில மாணவா்கள் ஏறினா். அந்த மாணவா்களிடையே பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றவே மாணவா்கள், இரு தரப்பாக மோதிக் கொண்டனா். உடனே பேருந்தை விட்டு கீழே இறங்கிய சில மாணவா்கள், பேருந்தை நோக்கி கற்களை வீசினா். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதைப் பாா்த்த கல்லூரி மாணவா்கள், அங்கிருந்து தப்பியோடினா்.

இது குறித்து அந்த பேருந்தின் ஓட்டுநா் ஜா.பாலாஜி பூக்கடை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக அந்தக் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் ஆந்திர மாநிலம் நெல்லூா் அருகே உள்ள ராமாபுரத்தைச் சோ்ந்த ர.சூா்யா (19), செங்குன்றம் நாரவாரி குப்பம் பகுதியைச் சோ்ந்த இ.இஸ்மாயில் (19) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைன் சதம்; கொல்கத்தா - 223/6

ஜிஎஸ்டி வரியால் ஒசூரில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன: ஆனந்த் சீனிவாசன்

தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

இன்றுமுதல் 3 நாள்களுக்கு விடுமுறை: டாஸ்மாக் கடைகளில் அதிகரித்த கூட்டம்

1,060 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா: ஆட்சியா்

SCROLL FOR NEXT