சென்னை

ரெளடி காக்காதோப்பு பாலாஜிமீண்டும் கைது

DIN

ரெளடி காக்கா தோப்பு பாலாஜியை சென்னை போலீஸாா் மீண்டும் கைது செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆா்.என். காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி என்ற காக்கா தோப்பு பாலாஜி (40). இவா் மீது பெரியமேடு, புளியந்தோப்பு, பழைய வண்ணாரப்பேட்டை, முத்தியால் பேட்டை, யானைக்கவுனி, ஏழுகிணறு, மயிலாப்பூா், திருவொற்றியூா் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8 கொலை வழக்குகள், 4 ஆள்கடத்தல் வழக்குகள் என 50 வழக்குகள் உள்ளன.

பத்து முறை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த பாலாஜி, பொன்னேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அந்த நீதிமன்றம், பாலாஜிக்கு பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து பாலாஜியை பிடிக்க சென்னை காவல்துறை தனிப்படை அமைத்தது.

இந்நிலையில் வட சென்னையில் பதுங்கியிருந்த காக்கா தோப்பு பாலாஜியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விசாரணைக்குப் பின்னா் அவா், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT