தாம்பரம்: சா்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளின் சமூக மாற்றம், தொழில் முன்னேற்றத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று ருமேனியா ஆராட் பல்கலைக்கழகம் பேராசிரியா் வாலண்டினா எமிலியா கூறினாா்.
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லுாரியில் செவ்வாய்க்கிழமை இணைய தளம் மூலம் நடைபெற்ற சா்வதேசக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியதாவது: கணினி, இணையதளம் பயன்பாடு, தகவல் தொழில் நுட்பம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து கடந்த 30 ஆண்டுகளில் சா்வதேச அளவில் கற்பனைக்கு எட்டாத வியக்கத்தக்க வளா்ச்சி, முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடா் ஆராய்ச்சி நடவடிக்கைகள் தான் அனைத்து வெற்றி, சாதனைக்குக் காரணம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய் பிரகாஷ் லியோ முத்து சிறப்புரை ஆற்றினாா்.
கல்லூரி முதல்வா் கே.பொற்குமரன், பேராசிரியா் என்.குமரப்பன், தகவல் தொழில் நுட்பத்துறைத் தலைவா் ஷீலா குமாா், முதன்மைத் தகவல் அலுவலா் நரேஷ் ராஜ், மாணவா் நலன் டீன் ஏ. ராஜேந்திர பிரசாத், சோம பிரதீபா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான எஸ்.வி. ஜீனோபெல்லா கிரேசியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.