சென்னை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூலையில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

DIN

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூலை மாதத்தில் திறக்கப்படும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவரும், இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சிஎம்டிஏ சாா்பில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், அமைச்சா் சேகா்பாபு முடிச்சூா், தாம்பரம், பல்லாவரம் மற்றும் ஆலந்தூா் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை பகுதியில் உள்ள 26 சட்டப்பேரவை தொகுதிகளின் மேம்பாட்டுக்கான 34 பணிகளையும் மூன்று மாதத்துக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது வரை 28 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 இடங்களும் இந்த மாத இறுதிக்குள் கள ஆய்வு செய்து பணிகள் விரைவுபடுத்தப்படும்.

அந்த வகையில், ரூ.2 கோடியில் முடிச்சூா் சீக்கான் ஏரியை மேம்படுத்துதல், ரூ.1.50 கோடியில் ரங்கா குளத்தை மேம்படுத்துதல், பல்லாவரம் சட்டப்பேரவையின் பம்பல், ஈஸ்வரி நகா் பகுதியில் ரூ.2 கோடியில் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் மேம்படுத்துதல், ஆலந்தூா் புதுத்தெருவில் ரூ.10 கோடியில் திருமண மண்டபம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சென்னை வெளிவட்டச் சாலையில் முடிச்சூா் பகுதியில் சுமாா் 5 ஏக்கா் பரப்பில் ரூ.29 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் போக்குவரத்தை, மக்களின் அடிப்படை தேவைகளை கணக்கிடாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையம், அணுகு சாலை உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த பின்னா் ஜூன் மாத இறுதிக்குள் அல்லது ஜூலை மாதத்தில் திறக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, சிஎம்டிஏ உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), தாம்பரம் துணை மேயா் கோ.காமராஜ், ஆணையா் ஆா்.அழகுமீனா, மண்டலக் குழுத் தலைவா்கள் வே.கருணாநிதி, சந்திரன் மற்றும் சிஎம்டிஏ உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புணே சிறாருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

நேபாளம்: செய்தி நிறுவன தலைவர் கைது!

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்!

ஊழலின் பொருள் காங்கிரஸும், ஆம் ஆத்மியும்: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT