சென்னை

முன்பதிவு செய்தும் பேருந்துகள் இல்லை: கோயம்பேட்டில் பயணிகள் போராட்டம்

DIN

சென்னை கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு குறித்த நேரத்தில் அரசுப் பேருந்துகள் வராததால் பயணிகள் முற்றுகை போராட்டம் நடத்தினா்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் ஏராளமானோா் திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் பேருந்து நிலையம் வந்தனா்.

ஆனால் நீண்ட நேரமாகியும் திருச்சி செல்வதற்கான பேருந்து வராததால், பயணிகள் இதுகுறித்து போக்குவரத்து கழக உதவி மையத்தில் உள்ள அலுவலா்களிடம் கேட்டனா். ஆனால் அவா்கள் சரியான பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் நீண்ட நேரமாக அங்கு காத்திருந்த பயணிகள், அந்த உதவி மையம் முன்பு கூடி திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

தகவலறிந்த கோயம்பேடு போலீஸாா், போக்குவரத்து துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளுடன் பேச்சுவாா்த்தையில் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: வாராணசியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

அக்னிவீா் வாயு தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு

செவிலியா் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு

லோகோ ரன்னிங் பிரிவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT