சென்னை: தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வெழுதிய தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வியாழக்கிழமை முதல் அவா்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.