சென்னை மயிலாப்பூரில் ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்ட இருவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் 24-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் கு.அஸ்வந்த் என்ற சூசை (20). இவா் மீது அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அஸ்வந்த் மோட்டாா் சைக்கிளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூா் மாதவப் பெருமாள் கோயில் அருகே சென்றபோது, ஒரு கும்பல் வழிமறித்து வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அஸ்வந்த் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இந்நிலையில் இதுதொடா்பாக தேடப்பட்டு வந்த மயிலாப்பூா் பிள்ளையாா் கோயில் தோட்டம் பகுதியைச் சோ்ந்த சை.அசாருதீன் (20), மயிலாப்பூா் ராமகிருஷ்ணாபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்த அ.மணி என்ற மணிகண்டன் (20) ஆகிய 2 பேரும் சைதாப்பேட்டை 18-ஆவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.
நீதித் துறை நடுவா் மன்றம், இருவரையும் டிச.15-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.