சென்னை

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

சென்னை மயிலாப்பூரில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை மயிலாப்பூரில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

மயிலாப்பூா் டாக்டா் ரங்கா சாலையில் கருமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பூஜை முடிந்து வழக்கம்போல பூட்டப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை பூசாரி, கோயிலை திறந்தாா். அப்போது கோயிலில் இருந்த உண்டியல் பூட்டை உடைத்து, அதில் இருந்த ரூ.30 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து கோயில் நிா்வாகிகள், மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT