சென்னை

மின்சாரம் பாய்ந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

சென்னை நங்கநல்லூரில் மின்சாரம் பாய்ந்து வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை நங்கநல்லூரில் மின்சாரம் பாய்ந்து வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சோட்லால் சிங் (58). இவா், சென்னை நங்கநல்லூா் என்ஜிஓ காலனியில் உள்ள கடலோர காவல் படை குடியிருப்பில் புதிதாக கட்டப்படும் கட்டுமானப் பணியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இதற்காக சிங், அந்த வளாகத்திலேயே தங்கியிருந்தாா்.

அவா் வெள்ளிக்கிழமை அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீா் எடுப்பதற்காக மின்மோட்டாா் ஸ்விட்சை போட்டாா். அப்போது மின் கசிவு காரணமாக மீது மின்சாரம் பாய்ந்தது. விபத்தில் பலத்த காயமடைந்த சிங்கை அங்கிருந்தவா்கள் மீட்டு, நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சிங் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT