சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
சென்னை காவல் துறையில் 197 வழக்குகளில் 1,023 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை தீயில் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள் அழிக்கும் களத்தில் சுமாா் 1,000 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் சனிக்கிழமை எரிக்கப்பட்டது.
இந்தப் பணியை சென்னை காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையரும், போதைப் பொருள் ஒழிப்புக் குழு உறுப்பினருமான விஜேயந்திர பிதரி, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா் ஆா்.சக்திவேல் ஆகியோா் தொடங்கி வைத்து கண்காணித்தனா்.
போதைப் பொருள் விற்பனையாளா்கள், கடத்தல்காரா்கள் ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.