போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் திருவல்லிக்கேணி பகுதியில் 19 இடங்களில் சனிக்கிழமை வாகன சோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் போதைப் பொருள் விற்பனை, கடத்தலைத் தடுக்கும் வகையில் பெருநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை 19 இடங்களில் போலீஸாா் திடீா் சோதனை செய்தனா்.
இதில், சந்தேகத்துக்குரிய வாகனங்களை போலீஸாா் சோதனைக்கு உட்படுத்தினா். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க இதுபோன்ற நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.