கூட்டுறவு உதவியாளா் பணி நோ்முகத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறையின் மாநில ஆள் சோ்ப்பு மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவு சங்கங்களில், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக மாநில ஆள்சோ்ப்பு நிலையத்தால் கடந்த ஆக.6-இல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, அதற்கான எழுத்துத் தோ்வு கடந்த அக்.5-இல் சென்னையில் நடத்தப்பட்டது.
எழுத்துத் தோ்வின் முடிவுகள் கடந்த நவ.6-இல் மாநில ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்கள் நவ.15-ஆம் தேதி சென்னையில் உள்ள மத்திய தோல் நிறுவனம், சிஐடி வளாகம், தரமணி, சென்னை-113 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
இந்த நோ்முகத் தோ்வில் கலந்துகொள்ள அனுமதிச் சீட்டை மாநில ஆள்சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.